தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர்

காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர்

காவேரிப்பட்டணத்தில் தி.மு.க.,வில் இணைந்த ஓ.பி.எஸ்., அணியினர்


ADDED : மார் 08, 2026 07:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2026 07:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி:காவேரிப்பட்டணத்தில், ஓ.பி.எஸ்., அணியில் இருந்து, 500க்கும் மேற்பட்டோர் தங்களை அமைச்சர் சக்கரபாணி முன்-னிலையில், தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., அண்மையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டார். அதை தொடர்ந்து தமிழகம் முழுவதும், ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் உள்ள ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள், அ.ம.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வை சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோர் தி.மு.க.,வில் இணையும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் மதி-யழகன் எம்.எல்.ஏ.,தலைமை வகித்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: அ.தி.மு.க.,வில் முக்கிய பொறுப்புக-ளையும், மூன்று முறை முதல்வராக பொறுப்பு வகித்த ஓ.பி.எஸ்., சுயமரியாதை இல்லாத காரணத்தால், தி.மு.க.,வில் இணைந்-துள்ளார். அவரை பின்பற்றி அவரது தொண்டர்களும், தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். எல்லோர்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்துள்ளோம். வரும் சட்டசபை தேர்தலில், 20-0க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தி.மு.க., வெல்வது உறுதி.

இவ்வாறு அவர் பேசினார்.

ஓ.பி.எஸ்., அணி காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளராக இருந்த சின்னசாமி பேசுகையில், “அ.தி.மு.க.,வில் எவ்வளவு பெரிய பதவி கொடுத்தாலும், அது வேண்டாம் எனக்கூறியே தி.மு.க.,வில் தொண்டராகி உள்ளோம். அ.தி.மு.க.,வில் தொண்ட-ராக இருந்து, சமய சந்தர்பத்தை பயன்படுத்தி, துணை பொதுச்-செயலாளரான முனுசாமியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஓ.பி.எஸ்., - டி.டி.வி., தினகரன் ஆதரவு நிர்வாகிகள், தொண்டர்களுடன் தி.மு.க.,வில் இணைந்துள்ளனர்,” என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ., செங்குட்டுவன், மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us