ADDED : செப் 03, 2026 02:15 AM
அ நிறம் | அளவு
ஓசூர்: சேலம் முத்துமாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முரு-கேசன், 50. ஓசூரிலுள்ள பாகலுார் சாலையில், தனியார் கட்ட-டத்தில் ஒரு வாரமாக தங்கி, பெயின்டிங் பணியாற்றி வந்தார்.
கடந்த, 25ம் தேதி காலை, 10:00 மணிக்கு, காண்டிராக்டரிடமி-ருந்து ஊதியம் பெற்று கொண்டு ஊருக்கு புறப்பட்டவர், வீட்-டிற்கு செல்லாமல் மாயமானார். அவரது மகன் சுதாகர், 30, புகார் படி, ஓசூர் ஹட்கோ போலீசார் வழக்குப்பதிந்து, முருகேசனை தேடி வருகின்றனர்.
