ADDED : அக் 26, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி ஊராட்சி ஒன்றியம், பில்லனகுப்பம் பஞ்., வசந்தப்பள்ளி ஏரி கரையோரத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில், பனை விதைகளை நடவு செய்யும் பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் துவக்கி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''மாவட்டத்தில் உள்ள, 10 வட்டாரங்களிலும், பசுமை தமிழ்நாடு இயக்கம் மூலம், தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்கள் சார்பில் தலா, 15 ஆயிரம் விதைகள் வீதம் மொத்தம், 1.50 லட்சம் பனை விதைகள் ஒரே நாளில் நடவு செய்யப்படுகிறது,''
என்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, மாவட்ட வன உயிரின பாதுகாப்பு அலுவலர் பகான்ஜெகதீஷ் சுதாகர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

