ADDED : செப் 23, 2024 03:42 AM
ஓசூர்: தமிழ்நாடு பிராமணர் சங்கம் (தாம்ப்ராஸ்) ஓசூர் கிளை சார்பில், ஓசூரில் முதல்முறையாக உலக நன்மைக்காக பஞ்ச கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
ஓசூர் நேதாஜி ரோடு கோதண்டராம சுவாமி, பாத்தக்கோட்டா சீதா ராம ஆஞ்சநேயர் சுவாமி, ஓசூர் ஏரித்தெரு ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, அகரம் சுயம்பு அபய ஹஸ்த லட்சுமி நரசிம்மர் சுவாமி, மோர்னப்பள்ளி அபய ஹஸ்த நரசிம்மர் சுவாமி ஆகிய, 5 உற்சவ மூர்த்திகளுக்கு, ஓசூர் சிஸ்யா பள்ளி வளாகத்தில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்கள் அர்ச்சனை செய்து, 5 சுவாமிகளின் உற்சவ மூர்த்திக-ளையும் ஒரே இடத்தில் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்ன-தானம், பிரசாதம் வழங்கப்பட்டது. கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மேயர் சத்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் நீல-கண்டன் உட்பட பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரி-சனம் செய்தனர். ஏற்பாடுகளை, தமிழ்நாடு பிராமணர் சங்க ஓசூர் கிளை தலைவர் சுதா நாகராஜன், மகளிரணி தலைவி ரோகிணி, நிர்வாகிகள் சத்தியவாகீஸ்வரன், ஜெயராமன் உட்பட பலர் செய்-திருந்தனர்.