ADDED : டிச 06, 2024 07:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட் டம், காவேரிப்பட்டணம் அடுத்த மிட்டஹள்ளி பஞ்., எம்.ஜி.ஆர்., நகர் பகுதியில் உள்ள ஓடை, ஏரியிலிருந்து வரும் உபரிநீர் எளிதாக வெளியேற்றும் வகையில் புதியதாக பாலம் அமைக்கும் பணியை மாவட்ட கலெக்டர் சரயு நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மலையாண்டஹள்ளி மேல்மக்கான் தெரு, வேங்கை நகரில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் உள்ள குடிநீரில் குளோரினேசன் செய்த பணிகளை ஆய்வு செய்தார். அப்போது குடிநீரில் குளோரின் அளவு சரியாக பராமரிக்கப்படாதது தெரிந்தது. இதையடுத்து, மலையாண்டஹள்ளி பஞ்., செயலர் சின்னசாமி என்பவரை, மாவட்ட கலெக்டர் சரயு, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.