தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு எதிர்ப்பு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்

குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு எதிர்ப்பு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்

குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கு எதிர்ப்பு மாணவர்களுடன் பெற்றோர் போராட்டம்


ADDED : செப் 09, 2026 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 05:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓசூர்:ஓசூரில், குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தங்களது குழந்தைகளுடன் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஓசூர் ஒன்றியம், சென்னசந்திரம் பஞ்., அகிலாகார்டன், தில்லை நகர், மீனாட்சி நகர், திருப்பதி மெஜஸ்டிக், விஸ்வநாதபுரம் உட்பட பல்வேறு பகுதி குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் குப்பையை, விஸ்வநாதபுரம் செல்லும் சாலையோரம் உள்ள அரசு நிலத்தில், பஞ்., நிர்வாகம் கொட்டி வருகிறது. குப்பையை தரம் பிரித்து, தேவையான குப்பையை மறு சுழற்சி செய்ய, சேவகானப்பள்ளி பகுதிக்கு கொண்டு செல்கின்றனர். மீதமுள்ள குப்பைகளுக்கு தீ வைத்து விடுகின்றனர். அதனால், விஸ்வநாதபுரம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள லேஅவுட்டுகளில் வசிக்கும் மக்கள், கடந்த, 5 ஆண்டுகளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குப்பை கொட்டும் இடத்தை சுத்தம் செய்து, விளையாட்டு மைதானமாக பயன்படுத்த, பொக்லைன் வாகனம் மூலம் மக்கள் சமன் செய்துள்ளனர்.

இந்நிலையில், அந்த இடத்தில் குப்பை தரம் பிரிக்கும் மையத்திற்கான, ஷெட் அமைக்க, பஞ்., நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விஸ்வநாதபுரம், வாஸ்துசாலா லேவுட், ஹோம்கார் சிட்டி, விஜய் நகர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்டோர், தங்களது குழந்தைகளை, நேற்று பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நல்லுார் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, சப்-கலெக்டரிடம் மனு கொடுக்க அனுப்பினர்.

அங்கு சென்ற பொதுமக்கள், தங்களது குழந்தைகளுடன் சப்-கலெக்டர் அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின், சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தியை சந்தித்து, மனு வழங்கினர். அப்போது, குப்பை கொட்டும் புறம்போக்கு நிலத்தை சுற்றி, காம்பவுண்ட் சுவர் அமைக்க இருப்பதாகவும், அங்கு புதிய திட்டம் வர இருப்பதாகவும், சப்-கலெக்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதை கேட்டு வெளியே வந்த மக்கள், 'குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைத்தால், ரேஷன், ஆதார், வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம்' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us