sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்

/

தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்

தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்

தேர் திருவிழாவையொட்டி மயில் வாகன உற்சவம்


ADDED : மார் 22, 2024 07:12 AM

Google News

ADDED : மார் 22, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மலை மீதுள்ள மரகதாம்பாள் உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர் திருவிழா கடந்த, 19 ல், திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது.

அன்றிரவு உற்சவ மூர்த்தி, தேர்ப்பேட்டை கல்யாணசூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார். இரவு, 9:00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு மயில் வாகன உற்சவம், நேற்றிரவு நந்திவாகன உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் வரும், 24 இரவு, 9:00 மணிக்கு திருக்கல்யாணம், 25 காலை, 10:10 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us