/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்
/
பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்
பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்
பெண்களை பாதுகாக்க உள்ளக குழு அமைக்காவிட்டால் அபராதம்
ADDED : நவ 03, 2024 01:29 AM
கிருஷ்ணகிரி, நவ. 3-
கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் பணிபுரியும் பணியாளர்கள் உள்ள அனைத்து பணியிடங்களிலும், பாலியல் வன்கொடுமையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம்-2013ன்படி உள்ளக குழு அமைக்க வேண்டும்.
அதன்படி அனைத்து அரசு, தனியார் அலுவலகங்கள், கூட்டுறவு துறை சார்ந்த சங்கம், நிறுவனங்கள், கிராம ஊராட்சிகள், பள்ளிகள், கல்லுாரிகள், மருத்துவமனைகள், வங்கிகள், காவல்நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள், வணிகவளாகங்கள், பயிற்சி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்களில், 10க்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ள இடங்களில், நான்கு பேர் கொண்ட உள்ளக குழு அமைக்கப்பட வேண்டும்.
இக்குழுவில், 50 சதவீதம் பெண்கள் இடம் பெற வேண்டும். உள்ளக குழு அமைக்காத அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் மீது, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். குழு அமைக்கப்
பட்டவுடன், உறுப்பினர்களின் விபரங்களை மாவட்ட சமூகநல அலுவலகத்திற்கு நவ., 16-க்குள் அனுப்பி வைக்க வேண்டும். குழுவின் செயல்பாடுகள் குறித்த நிகழ்வு அறிக்கையை, ஒவ்வொரு ஆண்டும் அறிக்கையாக மாவட்ட சமூகநல அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது dswokrishnagiri2@gmail.com மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விபரம் பெற, கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் சமூக நல அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற முகவரியிலும், 99444 13189, 76393 75360 ஆகிய எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.