sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்

/

ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்

ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்

ஓய்வூதியர் தின விழா கொண்டாட்டம்


ADDED : டிச 22, 2025 08:19 AM

Google News

ADDED : டிச 22, 2025 08:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் சார்பில், ஓய்வூதியர் தின விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட செயலாளர் ரமேஷ்குமார் வரவேற்றார். ஓய்வூதியர்களின் தந்தை நகராவின் படத்திற்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சங்க ஆலோசகர் ராஜாமணி, மாவட்ட தலைவர்கள் கோபிநாத்ராவ், ஜெகந்நாதன், டாக்டர் ராகவன் ஆகியோர் பங்கேற்றனர். 'ஈதல் இசைபட வாழ்தல்' என்ற தலைப்பில் புலவர் கணேசன், 'அறம் செய்ய விரும்பு' என்ற தலைப்பில் புலவர் ராமச்சந்திரன் ஆகியோர் பேசினர். மாநில சிறப்பு தலைவர் பொன்முடி, ஓய்வூதியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

மதியம், இன்றைய சூழ்நிலையில் ஓய்வூதியர்கள் அவரவர் இல்லங்களில் இருப்பது 'சுகமே - சுமையே' என்ற தலைப்பில், புலவர் ராமச்சந்திரன் தலைமையில் சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து, குண்டு எறிதல், கயிறு இழுத்தல், லக்கி பாக்ஸ், லெமன் ஸ்பூன், மியூசிகல் சேர் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. மாலை, கவியரங்கம், பட்டிமன்றம், விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு, பரிசு வழங்கி பாராட்டினர். பொருளாளர் நரசிம்மன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us