/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறையின்றி மக்கள் தவிப்பு

ADDED : மார் 11, 2025 06:38 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை தாசில்தார் அலுவலகத்திற்கு தினமும், 1,000க்கும் மேற்பட்டோர் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. தாசில்தார் அலுவலகம் வரும் மக்கள் குடிநீரின்றி தவித்து வருகின்றனர். மக்களின் பயன்பாட்டிற்காக கடந்த 2012 - 13ம் ஆண்டு, 4.60 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கென, தனித்தனி அறை கொண்டு நவீன வசதியுடன் கூடிய கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. மின் இணைப்பு, தண்ணீர் வசதி என அனைத்து வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட இந்த கழிப்பறை கட்டடம், ஒரு சில மாதம் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது.
தற்போது பயன்பாட்டில் இல்லாததால் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். அலுவலகம் அருகிலேயே இயற்கை உபாதைகள் கழிப்பதால், துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. பயனற்று கிடக்கும் கழிப்பறை கட்டடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து, மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுத்து குடிநீர் வசதி மற்றும் கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை விடுத்துள்ளனர்.