மக்கள் எந்த பிரச்னைக்கும் எப்போதும் என்னை அணுகலாம்: காங்., செல்லக்குமார்
மக்கள் எந்த பிரச்னைக்கும் எப்போதும் என்னை அணுகலாம்: காங்., செல்லக்குமார்
ADDED : ஏப் 12, 2026 05:18 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி சட்டசபை தொகுதியில், தி.மு.க., கூட்டணி சார்பில், காங்., கட்சியை சேர்ந்த டாக்டர் செல்லக்குமார் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று காவேரிப்பட்டணம் பகுதியில் பேசியதாவது: கடந்த முறை எனக்கு ஓட்டளித்து எம்.பி., ஆக்கினீர்கள். இந்த முறை எம்.எல்.ஏ., பதவிக்காக போட்டியிடுகிறேன். நான் எம்.பி.,யாக இருந்தபோது, ஓசூர் - ஜோலார்பேட்டை ரயில்வே திட்டத்திற்கு எப்போது வேண்டுமானாலும் நிதி ஒதுக்கும் அளவிற்கு, இத்திட்டத்தை முடித்து கொடுத்துள்ளேன்.
கிருஷ்ணகிரி அடுத்த கங்கலேரியில் மத்திய அரசின் கேந்திரவித்யாலயா பள்ளியை கொண்டு வந்தேன். இந்த மாவட்டத்தில் பல்வேறு மேம்பாலங்கள், தேசிய நெடுஞ்சாலை என எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளேன். நிதியை முழுமையாக செலவிட்ட எம்.பி., என பாராளுமன்றத்தில் பெயர் எடுத்துள்ளேன். நான் இங்கேயே இருந்து மக்கள் பணியாற்றுவேன். உங்களின் எந்த பிரச்னைக்கும் எப்போது வேண்டுமானாலும் என்னை அணுகலாம்.
இப்போது, தி.மு.க., கூட்டணி சார்பில், கிருஷ்ணகிரி தொகுதியில், 'கை' சின்னத்தில் போட்டியிடுகிறேன். கடந்த, 5 ஆண்டுகளில், தி.மு.க., அரசு பெண்களுக்கு இலவச பஸ் பயணம் வழங்கியதோடு, மகளிர் உரிமை தொகையாக மாதம், 1,000 ரூபாயும், நான் முதல்வன் திட்டத்தில் மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாயும், மாணவ, மாணவியருக்கு லேப்டாப் என எண்ணற்ற திட்டங்களை செயல்
படுத்தியுள்ளது. மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், மகளிர் உரிமை தொகையை, 2,000 ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு, 8,000 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா கூப்பன்களையும் வழங்க உள்ளது. எனவே எனக்கு, 'கை' சின்னத்தில் ஓட்டளித்து அதிக ஓட்டு வித்யாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். கிருஷ்ணகிரி தொகுதியில் செயல்படுத்தாமல் உள்ள அனைத்து திட்டங்களையும் அடுத்த, 5 ஆண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவேன்.
இவ்வாறு, அவர் பேசினார்.
