/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 குடும்பங்களை வெளியேற்ற வற்புறுத்துவதாக மக்கள் புகார்
/
20 குடும்பங்களை வெளியேற்ற வற்புறுத்துவதாக மக்கள் புகார்
20 குடும்பங்களை வெளியேற்ற வற்புறுத்துவதாக மக்கள் புகார்
20 குடும்பங்களை வெளியேற்ற வற்புறுத்துவதாக மக்கள் புகார்
ADDED : ஜன 07, 2025 01:07 AM
கிருஷ்ணகிரி, : போச்சம்பள்ளி அடுத்த பாரூரை சேர்ந்த, 20 குடும்பங்களை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
போச்சம்பள்ளி அடுத்த பாரூரில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு உள்ளது. இங்கு, 3 தலைமுறைக்கும் மேலாக, 20 குடும்பங்களை சேர்ந்தோர் வசிக்கிறோம். நாங்கள் அனைவரும் கூலித்தொழிலாளிகள். எங்களுக்கென்று எந்த நிலமோ, சொத்தோ இல்லை. இந்நிலையில் அங்கு குடியிருக்கும் எங்களை, உடனடியாக காலி செய்யுமாறு வருவாய்துறை அதிகாரிகள் வற்புறுத்துகின்றனர்.
நாங்கள் எங்கு செல்வதென்று தெரியாமல் தவிக்கிறோம். நாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகிலுள்ள பனந்தோப்பு பகுதியிலும் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. அங்காவது எங்களுக்கு வீட்டுமனை வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.