/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
குண்டும் குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
/
குண்டும் குழியுமான சாலை சீரமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : ஏப் 20, 2025 01:23 AM
ஊத்தங்கரை:திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் இருந்து, ஊத்தங்கரை செல்லும் பிரிவு சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையை இணைக்கும் முக்கிய சாலையாக, ஊத்தங்கரையில் இருந்து, அதியமான் நகர் வழியாக கொல்ல நாயக்கனுார் செல்லும் சாலை உள்ளது. இச்சாலை வழியாக பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கார்கள், கனரக வாகனங்கள், டூவீலர்கள் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் சென்று வருகின்றன.
இச்சாலை மிகவும் சேதமாகி குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால், சாலையில் குட்டை போல் நீர் தேங்கியுள்ளது.
இச்சாலை வழியாக இரவு நேரங்களில் பைக்குகளில் செல்லும் பொதுமக்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மிகவும் சிரமப்படுகின்றனர். அதிகளவிலான வாகனங்கள் இதில் செல்வதால், சேறும் சகதியுமாக மாறி உள்ளதால், டூவீலர்கள் அதில் சிக்கி விபத்து ஏற்படுகிறது. ஆகையால் உடனடியாக சாலையை சரிசெய்ய, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

