/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள்
/
காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை கொண்டாட சுற்றுலாத்தலங்களில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 18, 2024 10:34 AM
கிருஷ்ணகிரி: காணும் பொங்கலையொட்டி நேற்று, சுற்றுலாத் தலங்களில் மக்கள் குவிந்தனர்.
தமிழகத்தில், கடந்த, 15ல் பொங்கல் திருவிழாவும், 16ல் மாட்டுப் பொங்கலும் கொண்டாடப்பட்டன. நேற்று காணும் பொங்கலையொட்டி அரசு விடுமுறை என்பதால், பொதுமக்கள் சுற்றுலாத் தலங்களில் குவிந்தனர். அதன்படி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, மாவட்ட மக்கள் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பெரியவர்கள் கே.ஆர்.பி., அணை பூங்காவில் அமர்ந்து பொழுதை போக்கினர். பூங்கா விளையாட்டு உபகரணங்களில் விளையாட வந்த சிறுவர்கள், அங்கு தண்ணீர் தேங்கியிருந்ததால், விளையாட முடியாமல், ஏமாற்றத்துடன் திரும்பினர்.
காணும் பொங்கலுக்கு கே.ஆர்.பி., அணைக்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். ஆனால், அணையில் நேற்று எந்த பராமரிப்பும் இல்லாததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். சிலர் அணை பகுதியில் உணவு சமைத்தும், சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டும் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், அணையின் பின்பகுதியிலுள்ள மீன் வறுவல் கடைகளில் மீன் உணவுகளை சாப்பிட, பொதுமக்கள் அலைமோதினர்.
இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிலும், ஏரியிலுள்ள படகு இல்லத்திலும் கணிசமான பொதுமக்கள் பொழுதை போக்கினர். இதனால், கிருஷ்ணகிரி நகரில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்திருந்தது.