திட்டங்களை நிறைவேற்றும் ஒரே கட்சி தி.மு.க.,தான் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்: மதியழகன் எம்.எல்.ஏ.,
திட்டங்களை நிறைவேற்றும் ஒரே கட்சி தி.மு.க.,தான் என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்: மதியழகன் எம்.எல்.ஏ.,
ADDED : ஏப் 18, 2026 05:30 AM

கிருஷ்ணகிரி; ''திட்டங்களை நிறைவேற்றும் ஒரே கட்சி, தி.மு.க., என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர்,'' என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட கிராமங்களில், தி.மு.க., வேட்-பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரச்சாரம் மேற்-கொண்டும், முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோ-சனை கூட்டமும் நடத்தினார். அப்போது, த.வெ.க., உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, 200க்கும் மேற்பட்டோர் தங்களை, தி.மு.க.,வில் இணைத்து கொண்டனர்.அப்போது, மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இல்லம் தோறும் தி.மு.க., அரசின் திட்டங்கள் சென்றுள்ளது. நம் நிர்வாகிகள் வீதி பிரசாரம் போகும் போதே பெண்கள் அவர்களிடம், இம்முறையும், தி.மு.க.,வுக்குத்தான் ஓட்டு என கூறுகின்றனர். பல்வேறு கட்சிகள் வாய்க்கு வந்ததையெல்லாம், தேர்தல் வாக்குறுதி என்ற பெயரில் கூறியுள்ளது. ஆனால், சொன்ன திட்டங்களை நிறைவேற்றும் ஒரே கட்சி, தி.மு.க., என்பதை மக்கள் உணர்ந்து-விட்டனர். அதனால்தான் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்த வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவருக்கும், தி.மு.க.,வில் நிச்சயம் நல்ல பதவிகளுடன், மக்கள் பணிபுரியும் வாய்ப்பும் கிடைக்கும்.
தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள, 8,000 ரூபாய் கூப்பன் மற்றும் மகளிர் உரிமைத்-தொகை, 2,000 ரூபாய் பெற்றிடவும், விவசாயிக-ளுக்கு மீட்டர் இல்லாத பம்புசெட் கிடைத்திடவும், விடியல் பயணம், நான் முதல்வன், தமிழ் புதல்வன், புதுமைப்பெண், தாயுமானவர், அன்புக்-கரங்கள், காலை உணவுத்திட்டம் தொடர்ந்திட, நாம் அனைவரும் வரும் நாட்களில் இரவு பகல் பாராமல் உழைத்து, மக்களிடம் நம் திட்டங்களை எடுத்து கூற வேண்டும். தமிழகத்தில், 200 இடங்-களுக்கு மேல் வெற்றி பெற்று தி.மு.க., தலைவர் ஸ்டாலின் மீண்டும் முதல்வராகும் வரை நம் பணி தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
