/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பறவைகள் கழிவுகளுடன் குடிநீர் சப்ளை தேன்கனிக்கோட்டை மக்கள் அதிர்ச்சி
/
பறவைகள் கழிவுகளுடன் குடிநீர் சப்ளை தேன்கனிக்கோட்டை மக்கள் அதிர்ச்சி
பறவைகள் கழிவுகளுடன் குடிநீர் சப்ளை தேன்கனிக்கோட்டை மக்கள் அதிர்ச்சி
பறவைகள் கழிவுகளுடன் குடிநீர் சப்ளை தேன்கனிக்கோட்டை மக்கள் அதிர்ச்சி
ADDED : மே 29, 2025 01:19 AM
தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., 18வது வார்டுக்கு உட்பட்ட மாரசந்திரம் பகுதியில், 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அப்பகுதியிலுள்ள ஏரியில் போடப்பட்டுள்ள போர்வெல்லில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு, இரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றி, மாரசந்திரம் பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் நடக்கிது. கடந்த சில மாதங்களாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்தம் செய்யவில்லை.
கடந்த சில நாட்களுக்கு முன், தண்ணீர் கடும் துர்நாற்றம் வீசுவதாக, அப்பகுதி மக்கள் டவுன் பஞ்., நிர்வாகத்திடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் தெருகுழாய்கள் மூலம் சப்ளை செய்த குடிநீரில், பறவைகளின் இறக்கை மற்றும் இறைச்சி போன்ற கழிவுகள் இருந்தன. இதை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து, பொதுமக்களிடம் கேட்டபோது, 'தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யாமல் விட்டதால், அதற்குள் பறவைகள் இறந்து, அதன் கழிவுகளுடன் தண்ணீர் கடும் துர்நாற்றத்துடன் சப்ளை செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் சிறுவர், சிறுமியர் மற்றும் பெரியவர்களுக்கு காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளன. தற்போது தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், சரியாக சுத்தம் செய்ததாக தெரியவில்லை. அதனால், மாவட்ட கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.