sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை

/

வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை

வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை

வீட்டுமனை கேட்டு மக்கள் போராட்டம் தாசில்தார், போலீசார் பேச்சுவார்த்தை


ADDED : ஆக 18, 2025 02:42 AM

Google News

ADDED : ஆக 18, 2025 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தனப்பள்ளி:உத்தனப்பள்ளி அருகே, வீட்டுமனைப்பட்டா கேட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்-டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த டி.குருபரப்பள்ளி கிரா-மத்தில், வீடற்ற ஏழை, எளிய மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என, கடந்த சில ஆண்டுகளாக தமிழ்-நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் பல கட்டமாக, மனு கொடுக்-கப்பட்டது. மேலும், ஓசூர் சப்-கலெக்டர்

அலுவலகத்தில் கடந்த ஏப்., 29ம் தேதி போராட்டம் நடத்தப்

பட்டது.

கடந்த மாதம், 7ம் தேதி, சூளகிரி தாலுகா அலுவலகத்தில் காத்தி-ருப்பு போராட்டம் நடந்தது. அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், ஒரு மாதத்தில் வீட்டு

மனைப்பட்டா வழங்குவதாக

உறுதியளித்தனர்.

ஆனால் அதிகாரிகள் கூறியது போல், வீட்டுமனை வழங்க-வில்லை. எனவே, டி.குருபரப்பள்ளி கிராமத்தில் வசிக்கும், 100க்கும் மேற்பட்டோர், அப்பகுதியிலுள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் குடிசை அமைத்து போராட்டம் நடத்த, தமிழ்நாடு விவ-சாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேஷ் தலைமையில் நேற்று திரண்டனர்.

இதையறிந்த, சூளகிரி தாசில்தார் வளர்மதி மற்றும் உத்தனப்-பள்ளி ஸ்டேஷன் எஸ்.ஐ., தினேஷ்குமார் ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தி, தகுதியுள்ள பயனாளிகள் புதிய மனுக்கள் வழங்கினால்,

நடவடிக்கை எடுப்பதாக உறுதி

யளித்துள்ளனர். அதனால் போராட்டம் தற்காலிகமாக

கைவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us