தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்

குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் மக்கள் மறியல்


ADDED : மே 06, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

போச்சம்பள்ளி; கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, அப்புகொட்டாய், தேசன்கொட்டாய் பகு-தியில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்-ளன. இப்பகுதிக்கு ஒரு பொது குழாய் அமைத்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தில், தண்ணீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்க-ளுக்கு மேலாக, இப்பகுதியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் இப்பகுதி-யிலுள்ள மக்கள் நாகரசம்பட்டி சென்று, அங்கு அரசு நிதியில் அமைக்கப்பட்டுள்ள மினரல் வாட்-டரை, இரு சக்கர வாகனங்களில் எடுத்து வரு-கின்றனர்.

வாகனம் இல்லாதவர்கள், சுற்று வட்டாரத்தி-லுள்ள விவசாய கிணறுகளை தேடிச்சென்று, தண்ணீர் எடுத்து வரும் அவல நிலைக்கு தள்ளப்-பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் முதல், முதியோர் வரை, குடிநீருக்கு கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்நி-லையில், நேற்று காலை, 8:00 மணிக்கு, போச்சம்-பள்ளி காரிமங்கலம் செல்லும் சாலையில், அப்பு-கொட்டாய் பகுதியில், காலிக்குடங்களை வைத்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த, நாக-ரசம்பட்டி போலீசார், முறையாக குடி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறியதைய-டுத்து, சாலை மறியலை விட்டு கலைந்து சென்-றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us