/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் கடையில் தரமற்ற அரிசியால் மக்கள் அதிர்ச்சி
/
ரேஷன் கடையில் தரமற்ற அரிசியால் மக்கள் அதிர்ச்சி
ADDED : ஜன 27, 2025 02:34 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாலுகாவில், 135 முழு நேர ரேஷன் கடைகளும், 119 பகுதி நேர ரேஷன் கடைகளும் என மொத்தம், 254 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில், 1.36 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
இக்கடைகளில் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கும்போது, பொருட்கள் தரமின்றி இருந்தால், கண்டிப்பாக வழங்கக்கூடாது என்றும், அவ்வாறு தரமின்றி இருக்கும் அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை திருப்பி அனுப்பி விட வேண்டும் என்று, ரேஷன் கடை பணியாளர்களுக்கு உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆனால், கிருஷ்ணகிரி பழையபேட்டை நேதாஜி சாலையில் கூட்-டுறவுத் துறையின் கீழ் இயங்கி வரும், 7ம் எண் ரேஷன் கடையில், நேற்று முன்தினம் பழுப்பு நிறத்தில், வண்டுகளுடன் கூடிய பச்சை அரிசி வழங்கியதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், 10 கிலோ அரிசியை எடை போட்டு பார்த்தபோது, கால் கிலோ அரிசி குறைவாக இருந்ததாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே, இதுபோன்று தர-மற்ற பொருட் களையும், எடை குறைவாகவும் வழங்குவோர் மீது, நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

