/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தத்தால் மக்கள் அவதி
/
கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தத்தால் மக்கள் அவதி
கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தத்தால் மக்கள் அவதி
கிராமங்களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தத்தால் மக்கள் அவதி
ADDED : ஜன 15, 2025 12:41 AM
பாப்பிரெட்டிப்பட்டி, :
பாப்பிரெட்டிப்பட்டி அருகே, கிராம பகுதி
களுக்கு செல்லும் டவுன் பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பொதுமக்கள் போக்குவரத்து வசதி இன்றி அவதிப்பட்டனர்.
தர்மபுரி மாவட்டம், அரூரில் இருந்து சுகர் மில், மெனசி, பூதநத்தம் வழியாக பொம்மிடி வரை தினமும் டவுன் பஸ் தடம் எண், 10, 10 ஏ சென்று வருகிறது. பொம்மிடி, அரூர் செல்வதற்கும், பிற நகரங்களுக்கு செல்வதற்கும் இந்த டவுன் பஸ்சை தான் மக்கள் நம்பியுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்து வருகை தரும் இப்பகுதி மக்கள், அரூரிலிருந்து காலை, 5:30 மணிக்கு புறப்படும் டவுன் பஸ் தடம் எண், 10ல் வருவது வழக்கம். நேற்று காலை பொங்கலையொட்டி, வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான கூலி தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் டவுன் பஸ்கள் இல்லாமல் அவதிப்பட்டனர்.
சிறப்பு பஸ்களாக இந்த டவுன்பஸ்களை வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டதால், 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பஸ் வசதியின்றி அவதிப்பட்டனர்.