/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
20 ஆண்டுகளாக குடியிருக்கும் மக்கள் பட்டா கேட்டு சப்-கலெக்டரிடம் மனு

ADDED : டிச 09, 2025 05:37 AM

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட கொத்துார் பகுதியில், அரசு நத்தம், புறம்போக்கு நிலத்தில், 20 ஆண்டுக்கும் மேலாக, 40 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்கள் பட்டா கேட்டு கடந்த, 3 மாதங்களுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகளிடம் மனு வழங்கினர். அப்பகுதியில் ஒரு சிலருக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்ட நிலையில், 40 குடும்பங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லை. இப்பகுதி மக்கள், மின் கட்டணம், சொத்து வரி செலுத்தி வருகின்றனர்.
சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின், அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். ஆனால், எங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்படவில்லை என கூறி, அப்பகுதி, அ.தி.மு.க., கவுன்சிலர் மஞ்சுநாத் தலைமையில், 40 குடும்பங்கள் நேற்று சப்-கலெக்டர் ஆக்ரிதி சேத்தியிடம் மனு வழங்கினர். அதை பெற்றுக்கொண்ட சப்--கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.