/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மக்கள் மனு
/
தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றக்கோரி மக்கள் மனு
ADDED : அக் 07, 2025 01:23 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிகானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட பாரதிநகரை சேர்ந்த, 10க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
எங்கள் பஞ்.,க்கு உட்பட்ட பாரதியார் நகர் முதல் குறுக்குத்தெரு முதல், 5வது குறுக்கு தெரு வரையிலான பாதைகள் பல ஆண்டுகளாக முறையாக பராமரிக்கப்படவில்லை. மழைக்காலங்களில், மழைநீர் தேங்கி சாலைகள் சேதம் அடைந்தும், கழிவுநீர் கால்வாய்களில் குப்பை தேங்கி, மழை நீர் வெளியேற வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் டெங்கு, மலேரியா போன்ற தொற்று நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.