/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1,341 இடங்களில் சிலை வைக்க அனுமதி
/
1,341 இடங்களில் சிலை வைக்க அனுமதி
ADDED : ஆக 27, 2025 02:42 AM
தர்மபுரி, விநாயகர் சதுர்த்தியில் சிறப்பு பூஜை, பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும், 3 முதல், 5 நாள் வழிபாடு செய்த பின், அனுமதியளித்த நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கவுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தர்மபுரி சப்-- டிவிஷனில், 343 அரூர், 349, பென்னாகரம், 294, பாலக்கோடு, 355, என மாவட்டத்தில், 1,341 இடங்களில் விநாயகர் சிலை வைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் சார்பில், 1,241, பா.ஜ., சார்பில், 42, ஹிந்து முன்னணி, 25, ஆர்.எஸ்.எஸ்., 31, ஹிந்து மக்கள் கட்சி, விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் தலா ஒரு இடத்தில் என, வினாயகர் சிலை வைத்து வழிபாடு நடக்க உள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாவட்ட எஸ்.பி., மகேஸ்வரன் தலைமையில், ஏ.டி.எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் என மாவட்டத்தில், 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.