ADDED : மார் 06, 2026 07:17 AM
அ நிறம் | அளவு
ஊத்தங்கரை:ஊத்தங்கரை
அடுத்த, பெரியார் நகர் பகுதி மக்கள் பி.டி.ஓ., அலுவலகத்தில் அடிப்படை
வசதி செய்து தரக்கோரி, நேற்று மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி
மாவட்டம், ரெட்டிப்பட்டி பஞ்., பெரியார் நகர் பகுதியில், 7, 9வது
வார்டு, 4வது தெருவில், 15 மீட்டர் மட்டும் சாலை போடாமல் கிடப்பில்
உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் பள்ளி குழந்தைகள், மிகவும்
சிரமப்படுகின்-றனர்.
மேலும் அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற
வாக-னங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. அடிப்படை தேவை-யான சாலை,
கழிவுநீர் கால்வாய், அமைத்து தரவேண்டும் என, அப்பகுதி கிராம மக்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.
