/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை வசதிகோரி மனு
/
மாநகராட்சி பள்ளிக்கு அடிப்படை வசதிகோரி மனு
ADDED : பிப் 01, 2025 06:57 AM
ஓசூர்: ஓசூர் காமராஜ் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 1,225 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இப்பள்ளி வளா-கத்தில் மோசமான நிலையில் இருந்த வகுப்பறைகள் இடிக்கப்-பட்டு, 15 வது நிதிக்குழு திட்டத்தில், மாநகராட்சி நிர்வாகம் மூலம் கடந்தாண்டு, 1.20 கோடி ரூபாய் மதிப்பில், தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் கூடிய, 8 வகுப்பறைகள் கட்டப்பட்-டுள்ளன.
இப்பணிக்காக கட்டுமான பொருட்களை கொண்டு வர, பள்-ளியின் காம்பவுண்ட் சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. இப்ப-குதியில் இரும்பு கேட் அமைத்து தர வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. பள்-ளியில் மேயர் சத்யா ஆய்வு செய்தார்.
அப்போது, இரும்பு கேட் அமைத்து தர வேண்டும். பள்ளி வளாகத்தில் இயங்கும் அங்கன்வாடி மையத்தின் அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. கழிவறை வசதி செய்ய வேண்டும். புதிய வகுப்பறைகளில் மாணவ, மாண-வியர் அமர, டேபிள், டெஸ்க் வாங்கி தர வேண்டும் என, பள்ளி தலைமையாசிரியர் பத்மாவதி மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள், மேயர் சத்யாவிடம் கோரிக்கை மனு வழங்கினர்.