/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மலைவாழ் இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மனு
/
மலைவாழ் இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா கோரி மனு
ADDED : டிச 30, 2025 05:34 AM

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மருதேப்பள்ளி பஞ்., சூளாமலையை சேர்ந்த, மலைவாழ் இருளர் இன மக்கள், 10க்கும் மேற்பட்டோர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
எங்கள் பகுதியில், 10க்கும் மேற்பட்ட மலைவாழ் இருளர் இன மக்கள் வீடின்றி, மரத்தடியிலும், மாந்தோப்பிலும் வசித்து வருகிறோம். எங்கள் பகுதியில், 200 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளது. அதில் வீட்டுமனை கேட்டு, கடந்த, 2015 முதல் மனு அளித்து வருகிறோம். அப்பகுதியில் கொட்டகை அமைத்தால், அதேபகுதியை சேர்ந்தவர்கள், கொட்டகையை பிரித்து, எங்களை விரட்டுகின்றனர். இது குறித்து விசாரித்து, மாவட்ட கலெக்டர் எங்கள் பகுதியை பார்வையிட்டு, 10 குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

