/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கேந்திரிய வித்யாலயா பள்ளி கி.கிரியில் துவங்க கோரி மனு
/
கேந்திரிய வித்யாலயா பள்ளி கி.கிரியில் துவங்க கோரி மனு
கேந்திரிய வித்யாலயா பள்ளி கி.கிரியில் துவங்க கோரி மனு
கேந்திரிய வித்யாலயா பள்ளி கி.கிரியில் துவங்க கோரி மனு
ADDED : ஜன 07, 2025 01:08 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் நலச்சங்க தலைவர் மாதவன் தலைமையில், 10க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில்
கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மத்திய அரசு ஊழியர்கள், ராணுவத்தில் பணிபுரிபவர்கள், 20,700 க்கும் மேற்பட்டோர் உள்ளனர். பணி மாறுதலின் போது இவர்கள் குழந்தைகளின், நிலையான கல்வி கேள்விக்குறியாகிறது. மத்திய அரசு அலுவலர்கள் பணியிட மாறுதலின் போது, அவர்கள் குழந்தைகளின் பள்ளிப்படிப்பு தடைபடாமல் இருக்க, நாடு முழுவதும் கடந்த, 1963ல், மத்திய அரசால் தொடங்கப்பட்டு, தற்போது வரை, 1,256 இடங்களில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகின்றன. ஆனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை துவங்கப்படவில்லை.
கடந்த, 2016ல் கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்க முயற்சி எடுக்கப்பட்டது. இதற்காக கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை எதிரில், 10.01 ஏக்கர் அரசு நிலமும் ஒதுக்கப்பட்டது.
இடைப்பட்ட காலத்தில், கங்கலேரி அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், பள்ளி இயங்க கலெக்டரின் கருத்துரு அடிப்படையில், மாநில அரசு ஒப்புதலும் பெறப்பட்டது. ஆனால் இதுவரை, கேந்திரிய வித்யாலயா பள்ளி செயல்படவில்லை. நடப்பாண்டிலாவது இங்கு
கேந்திரிய வித்யாலயா பள்ளி துவங்கியும், பள்ளி கட்டடம் கட்ட மத்திய அரசு ஒப்புதலும், நிதியையும் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.