sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

நடைமேம்பாலம் அமைக்க மனு

/

நடைமேம்பாலம் அமைக்க மனு

நடைமேம்பாலம் அமைக்க மனு

நடைமேம்பாலம் அமைக்க மனு


ADDED : பிப் 03, 2026 07:01 AM

Google News

ADDED : பிப் 03, 2026 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி ஒன்றியம் அகசிப்பள்ளி பஞ்., ராயக்கோட்டையான் கொட்டாய் கிராமத்தில், பல்நோக்கு கட்டடம் கட்டும் பணியை துவக்கி வைக்க வருகை தந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாரிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:ராயக்கோட்டையான் கொட்டாய் கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கிருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு சென்று வருகின்-றனர். அனைவரும் திண்டிவனம் தேசிய நெடுஞ்-சாலையை கடந்து, பஸ் நிறுத்தத்திற்கு செல்ல வேண்டும். தேசிய நெடுஞ்சாலையை கடக்கும் போது அடிக்கடி விபத்து நடப்பதோடு, சில உயிரி-ழப்பும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு முறையும் உயிரை பணயம் வைத்து சாலையை கடந்து செல்கின்றனர். எனவே பாதுகாப்பு கருதி, இப்பகு-தியில் உயர்மட்ட நடைமேம்பாலம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த எம்.எல்.ஏ., அசோக்குமார், ''இது குறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து, விரைவில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கைகள் மேற்-கொள்ளப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us