ADDED : செப் 15, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த எஸ்.முதுகானப்-பள்ளி அருகே பி.தின்னுாரை சேர்ந்தவர் சீனப்பா, 52. தனியார் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தார்.
கடந்த, 10ம் தேதி காலை, 9:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி லட்சுமி தேவி, 41, புகார் படி, கெலமங்கலம் போலீசார் சீனப்பாவை தேடி வருகின்றனர்
