/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாசாணியம்மன் கோவில் மயானகொள்ளை திருவிழாவில் பக்தர்கள் பால்குட ஊர்வலம்

ADDED : பிப் 11, 2025 07:05 AM
ஓசூர்: ஓசூர் அருகே, மாசாணியம்மன் கோவில் மயான கொள்ளைதிருவிழாவையொட்டி, பால், மஞ்சள் குடத்துடன் பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சமத்துவபுரத்திலுள்ள மாசாணி யம்மன் கோவிலில், 8ம்
ஆண்டு மயான பூஜை, குண்டம் திருவிழா மற்றும் அலகு குத்தும் விழா கடந்த மாதம், 29ல் கொடியேற்றம்
மற்றும் காப்புக்கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கணபதி
ஹோமம், காலை, 11:00 மணிக்கு தேர்ப்பேட்டை தெப்பக்குளத்திலுள்ள பத்ரகாசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து, அம்மனுக்கு பக்தர்கள்
பால்குடம், மஞ்சள் குடம் மற்றும் அலகு குத்திக்கொண்டு, தேர்ப்பேட்டை, ராயக்கோட்டை சாலை,
பாகலுார் சாலை வழியாக மாசாணியம்மன் கோவிலுக்கு ஊர்வல-மாக சென்றனர். விழாவில் இன்றிரவு(பிப்.11), 11:00 மணிக்கு மேல் மயான கொள்ளை பூஜை நடக்கிறது. அதற்காக கோவில்
அருகே விழா திடலில் களிமண்ணால் மாசாணியம்மன் சிலை செய்யப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை, கோவில் பூசாரிகள் பாண்டியன், காமாட்சி மற்றும் முருகன் ராஜேஷ் மற்றும்
ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.