ADDED : மார் 24, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
போச்சம்பள்ளி,கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த, மஞ்சமேடு, தென்பெண்ணை ஆற்றிலிருந்து புலியூர், போச்சம்பள்ளி, மத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நேற்று காலை புலியூர் ஏரிக்கரை பகுதியில், குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, குடிநீர் சாலையில் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர். தகவலறிந்து வந்த குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் குழாய் உடைப்பை சரிசெய்தனர்.
