நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி;கிருஷ்ணகிரி பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்டின் ஒரு பகுதியில் அறிவுசார் மையம் (லைப்ரரி) அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான இடம் காலியாக உள்ளதால், அங்கு பொதுமக்கள் அசுத்தம் செய்து வந்தனர். இதையடுத்து, கிருஷ்ணகிரி 'உணர்வுகள்' அமைப்பு சார்பில், அந்த இடத்தை சுத்தம் செய்து அங்கு மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது.
இதில், 'உணர்வுகள்' அமைப்பை சேர்ந்தவர்கள், 8 நாவல், ஒரு சொர்க்கம், 20 மூங்கில் என மொத்தம், 29 மரக்கன்றுகளை நட்டனர். 'உணர்வுகள்' அமைப்பு சார்பில், ஏற்கனவே நகரின் பல்வேறு பகுதிகளில், 3,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர். நிகழ்ச்சியில், 'உணர்வுகள்' அமைப்பினர் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.