/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மண் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்
/
மண் திருட்டில் ஈடுபட்ட பொக்லைன் பறிமுதல்
ADDED : ஜன 25, 2025 02:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை பகுதியில், 24 மணிநேரமும் மண் திருட்டு நடப்பதாக அதிகாரிகளுக்கு புகார் வந்தது. இதைய-டுத்து நேற்று முன்தினம் மதியம் கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்-மதி தலைமையில் வருவாய்த்துறையினர்
அப்பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அப்போது, கே.ஆர்.பி., அணை அருகில் பெரிய மாரியம்மன் கோவில் பின்புறம் பொக்லைன் மூலம் சிலர் மண் திருட்டில் ஈடு-பட்டது தெரிந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்தவுடன் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அங்கு நின்ற பொக்லைன் வாகனம் மற்றும் மண் திருட்டில் ஈடுபட்டவர்கள் தவற விட்டு சென்ற மூன்று மொபைல்களை கைப்பற்றிய கிருஷ்ணகிரி தாசில்தார் வளர்மதி, கே.ஆர்.பி., அணை போலீசில் ஒப்படைத்தார். அவர் புகார்படி மண் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வரு-கின்றனர்.

