/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொக்லைன் உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
/
பொக்லைன் உரிமையாளர்கள் தொடர் வேலைநிறுத்தம்
ADDED : ஜூன் 05, 2025 01:04 AM
போச்சம்பள்ளி, போச்சம்பள்ளியில் பொக்லைன் வாகன உரிமையாளர் சங்கத்தினர், உதிரி பாகங்கள் விலை உயர்வு, வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தொழில் மிகவும் பாதிப்பதாக கூறி, கடந்த, 2-ம் தேதி முதல், 40க்கும் மேற்பட்ட பொக்லைன் வாகனங்களை ஓரிடத்தில் நிறுத்தி, தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது குறித்து, பொக்லைன் உரிமையாளர் சங்கத்தினர் கூறுகையில், 'பொக்லைன் வாகனத்திற்கு பயன்படுத்தும், டீசல், ஆயில், உதிரி பாகங்கள், புதிய வாகனங்கள் உள்ளிட்டவைகளின் உயர்வு, இன்சூரன்ஸ், சம்பள உயர்வு மற்றும் சாலை வரி உயர்வு உள்ளிட்ட காரணங்களால், பொக்லைன் தொழில் கடும் நஷ்டம் ஏற்பட்டு வருவதால், அரசு இதை கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது பொக்லைன் வாடகை மினிமம் ஒன்று முதல், 2 மணி நேரத்திற்கு, 2,800 ரூபாயும், அடுத்தடுத்த ஒரு மணி நேரத்திற்கு 1,400 ரூபாய் கூடுதலாகவும், டிராக்டர் லோடிற்கு, 400 ரூபாயும் விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு இப்பகுதியில் கட்டுமான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் விவசாயிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும்' என்றனர்.
இந்த வேலை நிறுத்தத் தால், போச்சம்பள்ளி சுற்று வட்டாரத்தில், விவசாயம், கட்டுமான பணிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது.