/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மாணவியை திருமணம் செய்த தொழிலாளிக்கு போலீசார் வலை
/
மாணவியை திருமணம் செய்த தொழிலாளிக்கு போலீசார் வலை
ADDED : நவ 27, 2024 12:58 AM
மாணவியை திருமணம் செய்த
தொழிலாளிக்கு போலீசார் வலை
ஓசூர், நவ. 27-
தேன்கனிக்கோட்டை தாலுகா, சின்ன சூளகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள், 24. கூலித்தொழிலாளி; இவர், அரசு பெண்கள் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது மாணவியை கடந்த, 23ம் தேதிக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக திருமணம் செய்ததாக, மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்
சென்றது.
இது குறித்து, விசாரணை நடத்த மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவிட்டார். அதன்படி, கெலமங்கலம் ஒன்றிய சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் கோமளா, 59, மற்றும் அலுவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் மாணவி கடந்த, 18 முதல், பள்ளிக்கு செல்லவில்லை என்பதும், சின்ன சூளகுண்டாவை சேர்ந்த பெருமாள், மாணவியை திருமணம் செய்து, கேரள மாநிலத்திற்கு அழைத்து சென்றதும் தெரியவந்தது. இது தொடர்பாக, ராயக்கோட்டை போலீசில் கோமளா புகார் செய்தார். குழந்தை திருமண சட்டத்தில் பெருமாள் மீது வழக்குப்பதிந்து, இருவரையும் போலீசார் தேடி
வருகின்றனர்.

