/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கொலையா என போலீசார் விசாரணை
/
கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கொலையா என போலீசார் விசாரணை
கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கொலையா என போலீசார் விசாரணை
கல்குவாரி குட்டையில் ஆண் சடலம் கொலையா என போலீசார் விசாரணை
ADDED : ஏப் 27, 2025 03:53 AM
தேன்கனிக்கோட்டை: தேன்கனிக்கோட்டை அடுத்த காரண்டப்பள்ளி அருகே, தொட்-டபிலிமுத்திரை - கச்சுவாடி செல்லும் சாலையோரம், பல ஆண்டு-களாக செயல்படாத தனியார் கல் குவாரி உள்ளது. குவாரியில் பாறை வெட்டி எடுக்கப்பட்டு பள்ளமான இடத்தில் குட்டை போல் தண்ணீர் தேங்கியுள்ளது. இதில், 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் மிதப்பதாக, காரண்டப்பள்ளி வி.ஏ.ஓ., சிலம்பரசன், தேன்கனிக்கோட்டை போலீசில் நேற்று புகார் செய்தார். போலீசார் சடலத்தை மீட்டு விசாரித்தனர். ஆனால் இறந்த நபர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.
அவரது வலது கையில் செல்வராஜ் என பச்சை குத்தப்பட்டுள்-ளது. சடலத்தை சுற்றி கயிறு சுற்றப்பட்டிருந்தது. அதனால் அவரை வேறு பகுதியில் கொலை செய்து, கயிற்றில் கல்லை கட்டி, சடலத்தை குட்டையில் வீசியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. தேன்கனிக்கோட்டை போலீசார், கொலையா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.