/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
/
திருட்டை தடுக்க போலீசார் விழிப்புணர்வு
ADDED : ஜன 13, 2025 02:40 AM
ஓசூர்: தொழில் நகரான ஓசூரில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்-களை சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர் விடுமுறை வரு-வதால், தங்களது சொந்த ஊர்களுக்கு குடும்பத்துடன் தொழிலா-ளர்கள் சென்று வருகின்றனர். இதை குறி வைத்து, கொள்ளை கும்பல், வீடு புகுந்து திருட்டில் ஈடுபடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, திருட்டு சம்பவம் நடக்காமல் தடுக்கும் முயற்சியில், ஓசூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, ஓசூர் டவுன் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட கோகுல் நகர், உட்பட பல்வேறு இடங்களில் நேரில் சென்று, ஒலிபெருக்கி மூலம், பணம், நகையை வீட்டில் வைத்து செல்லா-தீர்கள். பணத்தை வங்கியில் டிபாசிட் செய்யுங்கள்.நகையை லாக்கரில் வையுங்கள். வீடுகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்துங்கள். வெளியூர் சென்றால், போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டு, பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினர்.