/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கர்நாடகா மாநில எல்லையில் ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
/
கர்நாடகா மாநில எல்லையில் ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
கர்நாடகா மாநில எல்லையில் ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
கர்நாடகா மாநில எல்லையில் ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்
ADDED : டிச 17, 2024 07:32 AM
ஓசூர்: கர்நாடகா எல்லையில், போலீசாரை தாக்கி விட்டு தப்பிய ரவுடி சுட்டு பிடிக்கப்பட்டார்.கர்நாடகா மாநில எல்லையான ஆனைக்கல் அருகே பெஸ்தமனஹள்ளியை சேர்ந்தவர் லோகேஷ், 35. இவர் மீது, கர்நாடகா மாநில ஸ்டேஷன்களில் பல வழக்குகள் உள்ளன. அப்பகுதியில் ரவுடியாக வலம் வந்தார்; கடந்த சில நாட்களுக்கு முன், அப்பகுதியை சேர்ந்த மனோஜ் மீது, லோகேஷ் கூட்டாளிகள் தாக்குதல் நடத்தினர். ஜிகினி போலீசார், ரவுடி லோகேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடிய நிலையில், மாயச்சந்திரத்தில் ரவுடி லோகேஷ் பதுங்கியிருப்பதாக, நேற்று தகவல் கிடைத்தது.
அங்கு சென்ற இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் தலைமையிலான போலீசார், லோகேஷிடம் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைய
கூறினர். ஆனால் அவர், போலீசாரை தாக்கி விட்டு தப்பியோட முயன்றார். அதனால், இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத் கைத்துப்பாக்கியால்,
ரவுடி லோகேஷின் வலது காலில் சுட்டு பிடித்து கைது செய்தார். படுகாயமடைந்த லோகேஷ், பெங்களூரு தனியார்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.