/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் அருகே ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
/
ஓசூர் அருகே ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்
ADDED : டிச 27, 2024 02:35 AM
ஓசூர்:கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி சுனில், சில நாட்களுக்கு முன் அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி மனோஜ் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த தாக்குதல் குறித்து, கர்நாடகாவின் ஜிகினி போலீசார் வழக்கு பதிவு செய்து, இரண்டு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடினர்.
இவ்வழக்கில், முக்கிய குற்றவாளியான சுனில், கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதிக்கு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அத்திப்பள்ளி இன்ஸ்பெக்டர் ராகவ் கவுடா தலைமையிலான போலீசார், ரவுடி சுனிலை பிடிக்க வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக டூ - வீலரில் வந்த ரவுடி சுனிலை, போலீசார் பிடிக்க முயன்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு சுனில் தப்பி செல்ல முயன்றார்.
அப்போது, போலீசார் அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.