ADDED : அக் 25, 2024 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போலியோ விழிப்புணர்வு
கிருஷ்ணகிரி, அக். 25-
காவேரிப்பட்டணத்தில், உலக போலியோ தினத்தையொட்டி ரோட்டரி சங்கம் மற்றும் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இணைந்து, போலியோ விழிப்புணர்வு பேரணி நடத்தினர். இதில், ரோட்டரி மாவட்ட உதவி ஆளுனர் சிவராமன், எஸ்.ஐ.,க்கள் அமர்நாத், அறிவழகன் ஆகியோர் பேரணியை துவக்கி வைத்தனர். காவேரிப்பட்டணம் ரோட்டரி தலைவர் டாக்டர் வேடியப்பன், பேரணி, பஸ் ஸ்டாண்ட் வரை சென்று நிறைவடைந்தது. பேரணியில், பள்ளி மாணவர்கள் போலியோ விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.