ஊத்தங்கரை: ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடந்தது. முன்ன-தாக பள்ளியில் புகையில்லா போகி உறுதிமொழி மேற்கொள்ளப்-பட்டது. பல வண்ண கோலமிட்ட பள்ளி வளாகத்தில், புதிய பானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு பொங்கல் படை-யலிட்டு வழிபட்டனர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. இதில், மாணவர்கள், ஆசிரி-யர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட, மத்துார், சிவம்பட்டி, நாகம்பட்டி, களர்பதி, கொண்டமாண்டப்-பட்டி, அந்தேரிப்பட்டி உள்ளிட்டபஞ்., அ லுவலகம் முன்பு, பஞ்., நிர்வாகம் சார்பில், வண்ண கோலமிட்டு, தோரணம் கட்டி, பொங்கல் வைத்து நேற்று கொண்டாடினர். பர்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி, போச்சம்பள்ளி, ஜிங்கல்கதிரம்பட்டி உள்-ளிட்ட பஞ்., அலுவலகங்களில், பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடப்பட்டது.* பென்னாகரத்தை அடுத்த செங்கனுார் ஊராட்சி சார்பாக சின்-னப்பள்ளத்துார் கிராமத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்-பட்டது. சமத்துவ பொங்கல் வைத்தும், பள்ளி வளாகத்தில் மாகோனி, புங்கன், அரசமரம் உள்ளிட்ட மரக்கன்றுகள் நட்டும் விளையாட்டு போட்டிகளாக கயிறு இழுத்தல், கோலப்போட்டி, லெமன் ஸ்பூன், மியூசிக்கல் சேர் உள்ளிட்ட போட்டிகள் நடத்-தியும், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் தலைமை ஆசிரியர் பழனி, ஆசிரியர் கல்பனா, மேற்பார்வை பொறியாளர் மோதிலால் நேரு, ஊராட்சி செயலர் ரங்கநாதன், பணித்தள பொறுப்பாளர்கள் கங்கா, மாரியாத்தாள், கணினி பணியாளர் புஷ்பா உட்பட ஊர்மக்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

