ADDED : ஜன 15, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி,:
காவேரிப்பட்டணம் போலீஸ் ஸ்டேஷனில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாவட்ட எஸ்.பி., தங்கதுரை நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி டி.எஸ்.பி., முரளி முன்னிலை வகித்தார். இன்ஸ்பெக்டர்
சரவணன் தலைமையில் காவேரிப்பட்டணம் ஸ்டேஷனில் பணிபுரியும் எஸ்.ஐ.,க்கள், போலீசார் என அனைவரும் வேட்டி, சேலை என பாரம்பரிய உடையணிந்து வந்தனர். போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் கரும்பு, பானை வைத்து பொங்கல் விழாவை கொண்டாடினர்.