/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
/
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாட்டம்
ADDED : ஜன 15, 2025 12:40 AM
வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில்
பொங்கல் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி, :-கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் வேளாங்கண்ணி சி.பி.எஸ்.இ., பள்ளியில், 'பைம்பொழிலில் - 2025' பொங்கல் விழா, இது நம்ம திருவிழா' கொண்டாடப்பட்டது.
வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். பள்ளி இயக்குனர் விஜயலட்சுமி, பள்ளி முதல்வர் மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் விழாவை துவக்கி வைத்தார். சின்னத்திரை நட்சத்திரங்களான ஆதவன், அனிதா சம்பத் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொகுத்து வழங்கினர்.
விழாவில், மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அத்துடன் கிராமிய கலை குழுக்களின் தப்பாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், கரகாட்டம் மற்றும் கடவுள் வேடமிட்டு பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
பின்னர், மாணவர்களின் பெற்றோர்களுக்கு பலுான் உடைத்தல், உறியடித்தல், கயிறு இழுத்தல், பூசணிக்காய் சேகரித்தல் என பல்வேறு போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன.