/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணத்தில் ரூ.11 கோடியில் திட்ட பணிகளுக்கு பூஜை

ADDED : மார் 17, 2024 02:47 AM
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில், அங்கன்வாடி கட்டடம், நுாலகம், மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சிமென்ட் சாலை, சிறுபாலம் கட்டுவதற்காக, 10.19 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளுக்கு நேற்று பூஜை நடந்தது. காவேரிப்பட்டணம் தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் மகேந்திரன், சுப்பிரமணி தலைமை வகித்தனர். கிருஷ்ணகிரி தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பணிகளை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மணிமேகலை, மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி பஞ்., தலைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, கிருஷ்ணகிரி அடுத்த காட்டிநாயனப்பள்ளி பஞ்.,ல், 72.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு பூஜை நடந்தது. கிருஷ்ணகிரி நகராட்சியில், 24.70 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி நடந்தது. இந்தப்பணிகளையும் மதியழகன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப், நகர செயலாளர் நவாப், பஞ்., தலைவர் காயத்ரி கோவிந்தராஜ் மற்றும் நகராட்சி, பஞ்., உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.