/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சென்றாய சுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு பூஜை
/
சென்றாய சுவாமி கோவில் புனரமைப்பு பணிக்கு பூஜை
ADDED : ஜூலை 18, 2025 01:27 AM
ஊத்தங்கரை, ஊத்தங்கரையை அடுத்த, சாலமரத்துப்பட்டி பஞ்.,ல் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சென்றாய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் மராமத்து மற்றும் புனரமைப்பு பணிக்கு பூமி பூஜை நேற்று நடந்தது.
பர்கூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., மதியழகன் தலைமை வகித்து, 98 லட்சம் ரூபாய் மதிப்பிலான புனரமைப்பு பணிக்கு, பூமி பூஜை செய்து பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் சம்பத், தி.மு.க., கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ், பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் செந்தில், மத்துார் தெற்கு ஒன்றிய செயலாளர் நரசிம்மன், மத்துார் வடக்கு ஒன்றிய செயலாளர் குணவசந்தரசு, ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர்கள் குமரேசன், எக்கூர் செல்வம், ரஜினி செல்வம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து ஓலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில், 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட, 2 வகுப்பறை கட்டடத்தை, எம்.எல்.ஏ., மதியழகன் திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவிகளிடையே பேசினார்.