ADDED : செப் 22, 2024 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: சூளகிரி ஒன்றியம், இம்மிடிநாயக்கனப்பள்ளி பஞ்., உட்பட்ட சாமல்பள்ளம் தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோட்டில் இருந்து, கும்மனுார் கிராமம் வரை, 4.45 கி.மீ., துாரத்திற்கு, பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில், 3.30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார்ச்சாலை அமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்பணியை, வேப்பனஹள்ளி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., முனுசாமி நேற்று சாமல்பள்ளத்தில் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். சூளகிரி, அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியன், சைலேஷ்குமார், ஓசூர் மாநகராட்சி மண்டல தலைவர் ஜெயப்பிரகாஷ், இம்மிடிநாயக்கனப்பள்ளி பஞ்., தலைவர் மல்லையன் உட்பட பலர் பங்கேற்றனர்.