அதியமான் பாலிடெக்னிக்கில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு
அதியமான் பாலிடெக்னிக்கில் மக்கள் தொகை தின விழிப்புணர்வு
ADDED : ஜூலை 16, 2026 01:47 AM

அ நிறம் | அளவு
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அதியமான் பாலிடெக்னிக்
கல்லுாரியில், நாட்டு நலப்பணி திட்டம் சார்பில், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான தினேஷ்பாபு வர-வேற்றார். கல்லுாரி முதல்வர் பாலாஜி பிரகாஷ் தலைமை வகித்து, உலக மக்கள் தொகை தினத்தின் முக்கியத்துவம், மக்கள் தொகை பெருக்கத்தால் ஏற்படும் சவால்கள் மற்றும் சமூக பொறுப்புணர்வு குறித்து, மாணவ, மாணவியருக்கு விளக்கி கூறினார்.தொடர்ந்து, அவரது தலைமையில் மாணவர்கள் மற்றும்
ஆசிரியர்கள், உலக மக்கள் தொகை தின உறுதிமொழி ஏற்றுக்-கொண்டனர். துறைத்தலைவர்கள்
புவியரசு, நாகராஜன், சரளா, வித்யா உள்பட பலர் பங்கேற்றனர்.
