/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முதுகலை மேலாண்மையியல், கணினி பயன்பாட்டுயியல் பாடப்பிரிவு துவக்கம்
/
முதுகலை மேலாண்மையியல், கணினி பயன்பாட்டுயியல் பாடப்பிரிவு துவக்கம்
முதுகலை மேலாண்மையியல், கணினி பயன்பாட்டுயியல் பாடப்பிரிவு துவக்கம்
முதுகலை மேலாண்மையியல், கணினி பயன்பாட்டுயியல் பாடப்பிரிவு துவக்கம்
ADDED : செப் 07, 2025 12:52 AM
கிருஷ்ணகிரி, அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில், முதுகலை மேலாண்மையியல் மற்றும் கணினி பயன்பாட்டுயியல் பாடப்பிரிவுகளை, எம்.பி., தம்பிதுரை துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி அடுத்த போலுப்பள்ளியில் உள்ள, அறிஞர் அண்ணா கலைக்கல்லுாரியில், முதுகலை மேலாண்மையியல் மற்றும் கணினி பயன்பாட்டியியல் பாடப்பிரிவுகள் துவக்க விழா நடந்தது. கல்லுாரி தாளாளர் கூத்தரசன் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் தனபால் வரவேற்றார். கல்லுாரி நிறுவனரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான தம்பிதுரை, பாடப்பிரிவுகளை துவக்கி வைத்து பேசியதாவது:
மாணவ, மாணவியர் மேலாண்மை துறையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, திட்டமிட்டு இலக்குகளை அடைய வேண்டும். கால நிர்வாகத்தில் சிறந்து விளங்க வேண்டும். பொருளாதாரத்தை வளர்த்து கொள்வதில் மேலாண்மை துறை பங்கு இன்றியமையாதது.
மேலாண்மையில் சிறந்து விளங்கியதால் மட்டுமே, சீனா, ஜப்பான் நாடுகள் உலகளவில் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குகிறது. கணினி தொழில்நுட்பத்தில் புதிய மென்பொருள்களை கண்டுபிடிப்பதில், உலக நாடுகளுக்கு முன்மாதிரியாக இந்தியா திகழ வேண்டும்.
கல்வித்திறன் மூலமாக, அனைத்து துறைகளிலும் மாணவர்கள் தங்களுடைய சக்திகளை ஒருங்கிணைத்து சாதனை புரிய வேண்டும்.
இவ்வாறு பேசினார்.
எவோரிய இன்போ டெக் தனியார் நிறுவன நிறுவனர் அருண்சுந்தர், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.