/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை முகாம்
/
பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை முகாம்
பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை முகாம்
பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப் ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை முகாம்
ADDED : நவ 07, 2024 12:56 AM
பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப்
ஓசூர் அரசு ஐ.டி.ஐ.,யில் சேர்க்கை முகாம்
ஓசூர், நவ. 7-
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை: மாவட்ட அளவிலான, பிரதான் மந்திரி நேஷனல் அப்ரன்டிஸ்சிப் சேர்க்கை முகாம், வரும், 11 காலை, 9:30 முதல், மாலை, 4:00 மணி வரை, ஓசூர் அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் நடக்கிறது. இதில், மாவட்டத்திலுள்ள பொதுத்துறை மற்றும் முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவர்கள், 10ம் வகுப்பு, பிளஸ் 2, டிப்ளமோ மற்றும் டிகிரி முடித்த தகுதியானவர்களை தொழில்பழகுனர் பயிற்சிக்கு தேர்வு செய்ய உள்ளன.
ஐ.டி.ஐ., பயிற்சி பெற்றவர்கள், ஓராண்டு அப்ரன்டிஸ்சிப் பயிற்சி பெற்று, தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் (என்.ஏ.சி) பெறலாம். 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் கல்வித்தகுதி உடையவர்கள், நேரடியாக தொழிற்சாலைகளில் பிரெஷர் அப்ரன்டிஸாக சேர்ந்து, தொழில்பழகுனர் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற முடியும்.
டிப்ளமோ மற்றும் டிகிரி கல்வித்தகுதி உடையவர்கள், ஆப்சனல் பிரிவுகளில் ஓராண்டு தொழிற்பழகுனர் பயிற்சி பெற்று, என்.எஸ்.டி.சி., அல்லது எஸ்.எஸ்.சி., வழங்கும் அப்ரன்டிஸ்சிப் சான்றிதழ் பெறலாம். தேசிய தொழிற்பழகுனர் சான்றிதழ் பெறுபவர்களுக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உண்டு. இப்பயிற்சிக்கு மாத உதவித்தொகையாக, 8,500 ரூபாய் முதல்,18,000 ரூபாய் வரை நிறுவனங்களால் வழங்கப்படும். எனவே தகுதியானவர்கள் தங்களது அசல் கல்வி சான்றிதழ்களுடன் முகாமில் பங்கேற்கலாம். மேலும் விபரங்களுக்கு, 70220 45795, 97879 70227, 95977 11604 என்ற மொபைல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.