/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்
/
பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : ஏப் 22, 2025 01:37 AM
சூளகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அடுத்த சப்படியில், 800 ஆண்டுகள் பழமையான பிரசன்ன வெங்கடரமண சுவாமி கோவில் உள்ளது. 100 ஆண்டுக்கும் மேலாக இக்கோவிலில் தேரோட்டம் நடக்காமல் இருந்தது. கடந்தாண்டு முதல் தேர்த்திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த, 18ல் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று மதியம், 1:00 மணிக்கு மேல், அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது.
கர்நாடகா மாநிலம், மைசூர் அருகே மேல்கோட்டையை சேர்ந்த ஸ்ரீஸ்ரீ யதுகிரி யதிராஜ ஜீயர் சுவாமிகளின், 41வது பட்டம் நாராயண ராமானுஜ சுவாமிகள், பா.ஜ., மேற்கு மாவட்ட முன்னாள் தலைவர் நாகராஜ், தி.மு.க., மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் மற்றும் பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற தேர் மீண் டும் நிலையை அடைந்தது.
சப்படி, சூளகிரி, ஓசூர் சுற்றுப்புற கிராம மக்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு, 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடந்தது. வரும், 24 காலை, 6:00 மணிக்கு சுப்ரபாதம், விஸ்வரூப சேவை நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.